வால்பாறையில் மக்கள் நடமாட்டத்தை குறைக்க வாகனங்களுக்கு பெயின்ட் அடித்து காவல்துறையினர் நடவடிக்கை

கோவை: வால்பாறையில் மக்கள் நடமாட்டத்தை குறைக்க வாகனங்களுக்கு பெயின்ட் அடித்து காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை: வால்பாறையில் மக்கள் நடமாட்டத்தை குறைக்க வாகனங்களுக்கு பெயின்ட் அடித்து காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 

கோவை மாவட்டம் வால்பாறையில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஏராளமான பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதாக கூறி வால்பாறை நகருக்கு குடும்பத்துடன் வாகனங்களில் வந்து செல்கின்றனர். இதன் காரணமாக வால்பாறை நகரில் கூட்டம் அதிகரித்து வருகிறது. 

மேலும் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டம் கூட்டமாக நிற்கின்றனர். இதை கட்டுப்படுத்த காவல்துறையினருக்கு பெரிய சவாலாக உள்ளது. இதனை அடுத்து வால்பாறை டி.எஸ்.பி விவேகானந்தன் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் சிறப்பு ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் நகரில் பல இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டது. 



வால்பாறை நகருக்கு ஊரடங்கு உத்தரவை மீறி இன்று வந்த வாகனங்களுக்கு மஞ்சள் கலர் வர்ணம் பூசப்பட்டது. மஞ்சள் வர்ணம் பூசப்பட்ட வாகனங்கள் அடுத்த வாரம் இதே வியாழக்கிழமை மட்டுமே வரவேண்டும் மீறினால் அபராதம் விதிக்கப்படும் எச்சரித்து அனுப்பி வைத்தனர். 



மேலும், ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு கலர் பூசப்படும் இதன் படி அவர்கள் வால்பாறைக்கு வர வேண்டும் என்று தெரிவித்தனர். மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று தெரிவித்தனர்.

Newsletter

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...