கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு காலை, மதியம், மாலை, இரவு என 4 வேளையும் நோய் எதிர்ப்பு சக்தியுள்ள சத்தான உணவுகளை வழங்குவதாக இஎஸ்ஐ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறை கொரோனா எதிரொலியாக கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. மேலும் இந்த இஎஸ்ஐ மருத்துவமனையில் கோவை உட்பட நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ளவர்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இப்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெறுபவர்களுக்கு கோவை
இஎஸ்ஐ மருத்துவமனையில் நான்கு நேரமும் சத்தான உணவுகள் வழங்கப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மருத்துவமனையின் முதல்வர் நிர்மலா கூறும்போது;-
தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தினமும் காலையில் எழுந்ததும் இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு வழங்கப்படுகிறது. பின்னர் சிறிது நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும். இதைதொடர்ந்து பதினொரு மணியளவில் சத்துமாவு கஞ்சி வழங்கப்படுகிறது.
பின்னர் வேகவைத்த முட்டையுடன் மதிய உணவு வழங்கப்படும். அத்துடன் பழங்களும் வழங்கப்படும். இதையடுத்து, மாலை வேளையில் சுண்டல் மற்றும் சூப்பு வழங்குகிறோம். இரவு சப்பாத்தி அல்லது உப்புமாவுடன் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பால் வழங்கப்படுகிறது என தெரிவித்தார்.