இந்திய தொழில்‌ கூட்டமைப்பின்‌ தேசிய கவுன்சிலின்‌ உறுப்பினராக கே.எஸ்‌.பாலமுருகன்‌ மீண்டும் தேர்வு

கோவை: இந்திய தொழில்‌ கூட்டமைப்பின்‌ தேசிய கவுன்சிலின்‌ 2020 - 2021 ஆண்டிற்கான உறுப்பினர்‌ தேர்தலில் புதிய உறுப்பினராக கே. எஸ்‌. பாலமுருகன்‌ மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்‌.

கோவை: இந்திய தொழில்‌ கூட்டமைப்பின்‌ தேசிய கவுன்சிலின்‌ 2020 - 2021 ஆண்டிற்கான உறுப்பினர்‌ தேர்தலில் புதிய உறுப்பினராக கே. எஸ்‌. பாலமுருகன்‌ மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்‌.

இந்திய தொழில்‌ கூட்டமைப்பின்‌ (Confederation of Indian Industry) தேசிய கவுன்சிலின்‌ 2020 - 2021 ஆண்டிற்கான உறுப்பினர்‌ தேர்தல்‌ அண்மையில்‌ நடைபெற்றது. 

இத்தேர்தலில்‌ கோவை சொடல்டெக்‌ குழும நிறுவனங்களின்‌ மேலாண்‌ இயக்குநர்‌ கே. எஸ்‌. பாலமுருகன்‌ உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்‌. இப்பதவிக்காலம்‌ ஒர்‌ ஆண்டு ஆகும்‌. இப்பதவிக்கு இவர்‌ தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்‌.

மேலும்‌, இந்திய தொழில்‌ கூட்டமைப்பின்‌ தமிழ்நாடு மாநில கவுன்சில்‌ தேர்தலில்‌ இவர்‌ தொடர்ந்து 6வது முறையாக வெற்றி பெற்று 2020 - 2021 ஆம்‌ ஆண்டிற்கான உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்‌ என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல்‌ இந்திய தொழில்‌ கூட்டமைப்பின்‌ தென்‌ மண்டல கவுன்சில்‌ தேர்தலிலும்‌ வெற்றி பெற்று 2020 - 2021 ஆம்‌ ஆண்டிற்கான உறுப்பினராகி உள்ளார்‌.

தேசிய கவுன்சிலுக்கு சிறு தொழில்‌ நிறுவனங்கள்‌ பிரிவில் தமிழகத்தின்‌ மேற்கு மண்டலத்தில்‌ இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே தொழிலதிபர்‌ இவர்‌ என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில்‌ உள்ள சிறு தொழில்‌ நிறுவனங்கள்‌ சந்தித்து வரும்‌ பிரச்சனைகள்‌ தீர இந்திய தொழில்‌ கூட்டமைப்பின்‌ மூலம்‌ ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள்‌ எடுக்கப்‌ பாடுபடுவேன்‌ என பாலமுருகன்‌ தெரிவித்தார்‌.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...