ஊரடங்கு மீண்டும் நீட்டிப்பு? வரும் ஏப்ரல் 27ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

கோவை: ஊரடங்கை மீண்டும் நீட்டிப்பது குறித்து வரும் ஏப்ரல் 27ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோவை: ஊரடங்கை மீண்டும் நீட்டிப்பது குறித்து வரும் ஏப்ரல் 27ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் ஆங்காங்கே தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் வழக்கம்போல நடமாடி வருகின்றனர். அதேபோல தடையை மீறி அனாவசியமாக சாலைகளிலும் பயணிக்கின்றனர். 

இதனால் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பிற்கு இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது இருபது ஆயிரத்தை கடந்துவிட்டது. மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 653ஆக அதிகரித்துள்ளது. மேலும் 4100 பேர் குணமடைந்துள்ளனர். 

இந்த நிலையில், வரும் ஏப்ரல் 27ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஆலோசனையின் போது, கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும், தற்போது மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்தும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...