சென்னை: கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், காவலர்கள், உள்ளாட்சித் துறையினர், தூய்மை பணியாளர்கள் இறக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்திற்கு ரூ 50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவர்களுடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு கூறுகையில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் இறந்தால் ரூ 50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றார்.
மேலும், மருத்துவம், காவல் பணி, உள்ளாட்சித் துறையினர், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் கொரோனா பணி தடுப்பின் போது இறக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்திற்கு ரூ 50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்தார்.
அதேபோல, இறந்தவரின் குடும்பத்தில் தகுதி அடிப்படையில் அரசு பணி வழங்கப்படும். உரிய பாதுகாப்பு, மரியாதையுடன் மருத்துவர்கள் உடல் அடக்கம் செய்யப்படும். சிறப்பான முறையில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.
மேலும், சென்னையில் கொரோனா சோதனையை அதிகரிக்க வழி வகை செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.