மறு பதிவு செய்யப்பட்ட அனைத்து கட்டுமான தொழிலாளர்களுக்கும் உதவித்தொகை கிடைத்திட தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும் என கோரிக்கை!

கோவை: மறு பதிவு செய்யப்பட்ட அனைத்து கட்டுமான தொழிலாளர்களுக்கும் உதவித்தொகை கிடைத்திட தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும் என கோவை மாவட்ட கட்டுமான அமைப்பு சாரா அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு மாவட்ட ஆட்சியரிடம் மூலம் முதலமைச்சருக்கு மனு அளித்துள்ளனர்.


கோவை: மறு பதிவு செய்யப்பட்ட அனைத்து கட்டுமான தொழிலாளர்களுக்கும் உதவித்தொகை கிடைத்திட தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும் என கோவை மாவட்ட கட்டுமான அமைப்பு சாரா அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு மாவட்ட ஆட்சியரிடம் மூலம் முதலமைச்சருக்கு மனு அளித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வேலை இழந்து வருமானம் இன்றி தவிக்கும் கட்டுமான தொழிலாளர்களுக்கு உதவி தொகை, தொகுப்பு கிடைத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சருக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து கூட்டு குழுவினர் கூறுகையில், உணவு தொகுப்பு, உதவி தொகை வழங்கப்படுவதாக கொடுக்கப்பட்ட பட்டியலில் வாரிய பதிவு நடைமுறையில் உள்ள நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பெயர் விடுபட்டு உள்ளதாகவும் இவர்களுக்கு உணவுப் பட்டியலில் பெயர் விட்டுப் போனதால் நிதி உதவி கிடைக்குமா என்ற அச்சம் தொழிலாக மத்தியில் ஏற்பட்டுள்ளது.

எனவே, விடுபட்டுப் போன தொழிலாளர்கள் அனைவருக்கும் உதவித்தொகை கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். 144 தடை உத்தரவின் காரணமாக வேலை இழப்பு ஏற்பட்டு அன்றாட குடும்ப வாழ்நிலை பாதிக்கப்பட்டுள்ளது எனவும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்துகொள்ள முடியாத நிலையில் கட்டுமான தொழிலாளர்கள் உள்ளதாக தெரிவித்தனர்.

மேலும், கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு கல்வி உதவி, மகப்பேறு கால உதவி, இயற்கை மரணத்திற்கான உதவி, பணியிடத்திற்கு வழியில் விபத்தில் மரணமடைந்தார் உதவி ஆகிய தொகையை உயர்த்தி வழங்கலாம் என நல வாரிய கூட்டத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு தொழிலாளர் அமைச்சர் அறிவித்திருந்தார்.

அறிவிப்பு வெளியிட்டு 6 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் இது உடனடியாக அமலுக்கு வரும் என தொழிலாளர்கள் ஆவலுடன் காத்து இருப்பதாகவும் இதனை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் என கூட்டுக் குழு அமைப்பு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...