கோவை: கோவையில் முதல்வர் நிவாரண நிதிக்கு கொங்கு பண்பாட்டு கலாச்சார அறக்கட்டளை சார்பாக ரூ.50,000 மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி அவர்களிடம் வழங்கப்பட்டது.
கோவை: கோவையில் முதல்வர் நிவாரண நிதிக்கு கொங்கு பண்பாட்டு கலாச்சார அறக்கட்டளை சார்பாக ரூ.50,000 மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி அவர்களிடம் வழங்கப்பட்டது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இதனிடையே, கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நிதியுதவி அளிக்குமாறு மத்திய மாநில அரசுகள் கேட்டுக் கொண்டதன் பேரில் தொழில் அதிபர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் நிதியுதவிகளை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், கொங்கு பண்பாட்டு கலாச்சார அறக்கட்டளை சார்பாக இன்று முதல்வர் நிவாரண நிதியாக 50,000 ரூபாய் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி அவர்களிடம் வழங்கப்பட்டது.