கோவை: கொரோனா வைரஸ் தொற்று எதிரொலியாக கோவை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பத்திரிகையாளர்களுக்கு ரேபிட் கிட் மூலம் நடத்தப்பட்ட சோதனையில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது.

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் மத்திய மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மும்பையில் ஊடகத்துறையில் பணியாற்றிய 54 பேருக்கு நோய் தொற்று உறுதியானது. இதனை தொடர்ந்து அவர்களை தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல, சென்னையில் ஊடகத்துறையில் பணியாற்றிய 4 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டது.

இதனையடுத்து, அவர்களுடன் தொடர்பில் இருந்த 30 பேருக்கு தொற்று ஏற்பட்டு இருப்பதாகவும் அவர்களை தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்று உள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் பல்வேறு ஊடகங்களில் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு ரத்த மாதிரி சோதனை எடுக்கப்பட்டு ரேபிட் டெஸ்டிங் கிட் மூலம் சோதனை செய்யப்பட்டது.

சுமார் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு சோதனை செய்யப்பட்ட நிலையில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது.
இதேபோல, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டத்திலும் பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.