நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தனிப்படையினர் நடத்திய சோதனையின் போது சட்டவிரோதமாக காய்ச்சப்பட்ட சுமார் 15 லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றினர்.

நீலகிரியில் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் அவர்களுக்கு வந்த தகவலை அடுத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபி அவர்கள் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்காணித்து கள்ளச்சாராயம் விற்பவர்களை கண்டுபிடித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இதனிடையே, மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் சுபாஷினி அவர்களுக்கு நியூவோப் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பெரிய சூண்டி என்ற இடத்தில் பழைய சாராய வியாபாரி மணிவேல் என்பவர் சாராயம் விற்பனை செய்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில் கூடலூர் காவல் ஆய்வாளர் அவர்கள் உத்தரவின் பேரில் நியூ ஹோப் உதவி ஆய்வாளர் ரவி, கூடலூர் சிறப்பு தனிப்படை பிரிவு செல்வராஜ், சியாபுதீன், பரதன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு இப்பகுதியில் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

தனிப்படையினர் சம்பந்தப்பட்ட நபரின் வீட்டின் அருகில் சோதனை செய்து அருகிலிருந்த தோட்டத்திலிருந்து சுமார் 15 லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றினர்.

கடந்த இரண்டு நாட்களில் ஓவேலி பகுதியில் சுமார் 35 லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.