கோவை மாவட்டத்திற்கு கூடுதலாக 1200 கிட் வர உள்ளது - மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தகவல்

கோவை: கோவை மாவட்டத்திற்கு 2000 ரேபிட் கிட் வந்துள்ள நிலையில் 1000 ரேபிட் கிட் பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூடுதலாக 1200 கிட் கோவைக்கு வர உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்தார்.

கோவை: கோவை மாவட்டத்திற்கு 2000 ரேபிட் கிட் வந்துள்ள நிலையில் 1000 ரேபிட் கிட் பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூடுதலாக 1200 கிட் கோவைக்கு வர உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்தார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை ரேபிட் டெஸ்ட் கருவி மூலம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டு தங்கள் ரத்த மாதிரிகளை வழங்கி கொரோனா பாதிப்பு குறித்து சோதனை செய்து கொண்டனர்.

இந்த முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, சோதனை குறித்து சுகாதாரத் துறையினரிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கோவை மாவட்டத்தில் இதுவரை 133 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் சிகிச்சை முடிந்து 54 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் எனவும் இன்று கணிசமான நபர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார்கள் என நம்புவதாக தெரிவித்தார்.

கோவை மாநகரில் 10 பகுதிகளும் மாவட்டத்தில் 8 பகுதிகளும் தனிமை பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது என கூறிய அவர், அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்தால் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வகையிலும் ஆய்விலும் ஈடுபட்டு உள்ளனர். யார் மூலமும் தொற்று இல்லை என்பதை உறுதி படுத்தும் வகையில் பணியாற்றி வருவதாகவும் கோவை மாவட்டத்திற்கு 2000 ரேபிட் கிட் வந்துள்ளது அதில் 1000 ரேபிட் கிட் பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூடுதலாக 1200 கிட் கோவைக்கு வர உள்ளதாக தெரிவித்தார்.

புதிய ரேபிட் கிட் மூலம் சோதனை செய்யப்பட்டதில் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் இன்று கோவை மாவட்ட பத்திரிகையாளர்களுக்கு சோதனை நடத்தப்பட்டது என்றார். நாளை ஆட்சியர் அலுவலக பணியாளர்களுக்கு சோதனை நடத்தப்படும் என்றார்.

மேலும், எங்கெல்லாம் தேவை உள்ளதோ அங்கெல்லாம் ரேபிட் கிட் சோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கர்ப்பினி பெண்களுக்கு கொரோனா பாதிப்பு தொடர்பாக அங்குள்ள பிரசவ வார்டு சந்தேகத்தின் பேரில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். 

பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்கள் மூவரை தவிர மற்றவர்களுக்கு பயண வரலாறு உள்ளதாகவும் பொள்ளாச்சி மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக வந்த வால்பாறை, ஊஞ்வேலாம்பட்டி, ஆத்துப்பாலம் பகுதிகளை சேர்ந்த 3 பெண்களுக்கு டிராவல் ஹிஸ்டரி இல்லை எனவும் பிரசவ வார்டு மீது உள்ள சந்தேகத்தின் காரணமாக அந்த வார்டை மூட உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...