கோவை: கோவையில் வறுமை கோட்டிற்குள் இருக்கும் மாணவர்களுக்கு வீடு தேடி சென்று அத்தியாவசிய பொருட்களை வழங்கிய என்.ஜி.ஆர் பள்ளி ஆசிரியர்களின் மனிதநேயம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வரதராஜபுரத்தில் அரசு உதவி பெறும் தியாகி என் ஜி ஆர் மேல் நிலைப்பள்ளி 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பெரும்பாலும் கூலித் தொழிலாளர்களின் குழந்தைகள் 2300 பேர் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், கொரொனா எதிரொலி காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து மத்திய ,மாநில அரசுகள் உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து வெளி மாவட்டங்களில் இருந்து கட்டிட வேலை மற்றும் கூலித் தொழிலாளர்களாக பணிபுரிபவர்கள், வேலை இல்லாமல் அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கொடுத்து உதவிய உணவு மற்றும் மளிகை பொருட்களை வாங்கி நாட்களை கடத்தி வந்தனர்.
இந்நிலையில், தியாகி என் ஜி ஆர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவர் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவருக்கு கடந்த வாரம் தொலைபேசியில் என்ன செய்கிறீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு அந்த மாணவன் 144 தடை உத்தரவு காரணமாக அப்பாவுக்கு வேலையில்லாமல் சாப்பிடுவதற்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அந்த ஆசிரியர், தலைமையாசிரியர் சதாசிவனிடம் இது குறித்து தகவல் கொடுத்துள்ளார். தலைமையாசிரியர் சதாசிவம் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் கிடைக்கப்பெற்ற மூன்று லட்சம் ரூபாய்க்கு ஒரு குடும்பத்திற்கு 15 நாட்களுக்கு தேவையான 1500 ரூபாய் மதிப்புள்ள அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட மளிகை மற்றும் அத்தியாவசிய பொருட்களை வறுமை கோட்டிற்குள் உள்ள 400 மாணவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்க இருக்கின்றனர்.
முன்னதாக பள்ளி வளாகத்திற்கு அருகிலுள்ள 10 பெற்றோர்களுக்கு பள்ளியில் வைத்தே ஆசிரியர்கள், பெற்றோர் ஆசியர் கழகத்தினர், முன்னாள் மாணவர்கள் பொருட்களை வழங்கினர். மாணவனின் ஒற்றை வார்த்தையால், ஆசிரியர்களிடமிருந்து வெளிப்பட்ட மனிதநேயம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.