கோவையில் கொரோனா நிவாரண களத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கண்ணில் கூட படவில்லை - கார்த்திக் எம்எல்ஏ

கோவை: கோவையில் கொரோனா நிவாரண களத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கண்ணில் கூட படவில்லை என கார்த்திக் எம்எல்ஏ கேள்வி எழுப்பி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கோவை: கோவையில் கொரோனா நிவாரண களத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கண்ணில் கூட படவில்லை என கார்த்திக் எம்எல்ஏ கேள்வி எழுப்பி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து தி.மு.க. கோவை மாநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ., அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-

கொரோனா வைரசால் நாடே விழி பிதுங்கி திக்கற்று நிற்கும் நிலையிலும்கூட களத்தில், விளிம்பு நிலை மக்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் என அத்தியாவசிய பொருள்களை வழங்கி தி.மு.க.,வினர் வேலைசெய்து வருகின்றனர். கழகத் தலைவர் அவர்கள் களத்தில் நேரடியாக இறங்கிச் செயல்படுகிறார். உதவி தேவைப்படும் இடங்களுக்கெல்லாம் சளைக்காமல் சென்று, நிவாரண உதவி செய்கிறார். 

அரசு கேட்பதற்கு முன்பே, கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி தி.மு.க. எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் 20 லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய்வரை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து உடனடியாக ஒதுக்கீடு செய்தனர். கழகத்தின் சார்பிலும் நிவாரண நிதி கொடுக்கப்பட்டது. தி.மு.கழக நிர்வாகிகள் அரிசி, பருப்பு, காய்கறிகள், உணவு, பாதுகாப்பு உபகரணங்கள் எனத் தேவைப்படுவோரைத் தேடிச் சென்று கொடுப்பது - உதவிகள் செய்து கொடுப்பது எனப் பொறுப்புமிக்க எதிர்க்கட்சியாக தி.மு.க மக்களுக்காக களப் பணியாற்றி வருகிறது. 

கோவையில், கொரோனா அச்சுறுத்தலால் மக்கள் அவதியுற்று வரும் நிலையில், தி.மு.க.,வும், பல தன்னார்வலர்களும் - அமைப்புகளும் சாமானி மக்களைத் தேடித்தேடிச் சென்று நிவாரண உதவிகளைச் செய்து கொண்டிருக்கையில், அதைவிட அதிகளவில் உதவிக்கரம் நீட்ட வேண்டிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட அக்கட்சியின் நிர்வாகிகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இதுவரை 27 நாட்களாகியும் கொரோனா நிவாரண களத்தில் கண்ணில் கூட படவில்லையே ஏன்? 

கோவையில் உள்ள அ.தி.மு.க.,வினர் ரேஷன் கடை டோக்கன் விநியோகம் போன்றவைகளில் காட்டும் ஆர்வத்தை, ஏழை - எளிய மக்களுக்கு உதவிகள் செய்வதில் காட்டுவதில்லை! மக்களின் வரிப் பணத்தில் அரசு நியாய விலைக் கடைகளில் கொடுக்கும் அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை, அ.தி.மு.க.,வினரே தங்கள் சொந்த செலவில் தருவது போல் 'போட்டோ' எடுத்து விளம்பரம் தேடிக் கொண்டதைத் தவிர, அடித்தட்டு மக்களுக்கு இதுவரை எந்தவொரு நிவாரண உதவியும் செய்யவில்லை . 

மேலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், "அ.தி.மு.க.,வினர் நிவாரண நிதியுதவி மற்றும் அத்தியாவசியமான நிவாரணப் பொருட்களைக் கொடுங்கள்" என்று இரண்டு முறை அறிக்கை வெளியிட்டும், அ.தி.மு.க. நிர்வாகிகள் கொடுக்க முன்வரவில்லை என்றும், அரசு அறிவித்த சமூக இடைவெளி வேண்டும் என்ற அறிவிப்பை சிறிதும் பொருட்படுத்தாமல் கோவையில் உள்ள அ.தி.மு.க.,வினர் அமைச்சர் தலைமையில் கிருமி நாசினியை தெளிப்பதை பார்வையிடுவது, அம்மா உணவகத்திற்கு கூட்டமாகச் சென்று போட்டோ எடுத்துக் கொள்வது என்று கும்பலாக செல்வதாக, 12.04.2020 அன்று வெளியான ஒரு நாளிதழில் செய்தி வந்துள்ளது. 

கோவையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளாக, ஊரடங்கு உத்தரவு அமலான நாளில் இருந்து, கடந்த 27 நாட்களாக, கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, பம்பரமாக சுழன்று அத்தியாவசியமான நிவாரணப் பொருட்களை ஏழை - எளிய, நடுத்தர மக்கள், வெளிமாநில தொழிலாளர்களுக்கு கொடுத்து களத்தில் இறங்கி, மக்களுக்கு அத்தியாவசிய உதவிகளைச் செய்வதோடு அவர்களின் அச்சம் களையவும் தி.மு.கழகம் போராடி வருகிறது. 

தி.மு.க.,வினர் செய்த நிவாரண உதவிகளை பார்த்து, அதிர்ச்சியடைந்த அ.தி.மு.க. அரசு, சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சிகள் நிவாரணப் பொருட்கள், உணவு கொடுக்க தடைவிதித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

இதுகுறித்து “காலத்தில் துயருறும் எளியவர்களின் பசி நீக்க, தமிழ் மக்களின் கரங்கள் நீளும்போது, அதைத் தடுக்க உத்தரவிட எவராலும் இயலாது, தானும் செய்யாது அடுத்தவர்களையும் தடுப்பது வஞ்சகம்! இது ஜனநாயக நாடு; உதவி செய்யக் கூடாது என்பது சர்வாதிகாரத்தனம்! 'கருணையில்லா ஆட்சி கடிந்தொழிக!'” என கழகத் தலைவர் அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.

கோவை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் காலை 5.30 மணிக்கே பணிக்கு வந்து விடுகிறார்கள். அவர்களுக்கு காலை 11.00 மணியானாலும் கூட மாநகராட்சியால் உணவு வழங்கப்படுவதில்லை. மேலும், இவர்களுக்குப் போதுமான முகக்கவசம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள்கூட பெயரளவில்தான் மாநகராட்சியால் வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க. மற்றும் தன்னார்வலர்கள்தான் அவர்களுக்குப் போதுமான முகக்கவசம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி வருகிறார்கள் . இதுகுறித்து எவ்வித கவலையுமின்றி, எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி இதே மாநகரத்தில் வசித்து வருகிறார். 

மேலும் கடந்த சில நாட்களாக, கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு சரியான உணவு, முகக்கவசம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள்கூட அரசு நிர்வாகத்தால் வழங்கப்படவில்லை. இப்பிரச்சினை வலுத்த காரணத்தால், அரசு மருத்துவமனையின் முதல்வரை பணியிட மாற்றம் செய்தது, இதற்குச் சிறந்ததொரு எடுத்துக்காட்டாக உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...