மேட்டுப்பாளையத்தில் 3000 தூய்மை பணியாளர்கள் குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட கொரானோ நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி

கோவை: மேட்டுப்பாளையம் அருகே பெள்ளேப்பாளையம் ஊராட்சி தலைவர் சார்பில் 3000 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட கொரானோ நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

கோவை: மேட்டுப்பாளையம் அருகே பெள்ளேப்பாளையம் ஊராட்சி தலைவர் சார்பில் 3000 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட கொரானோ நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

கொரானோ வைரஸ் பரவுதல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சாதாரண ஏழை மக்கள் வேலையிழந்து கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர். வேலைக்கு சென்றதால் தான் சோறு என்ற நிலையில் வேலையின்றி கூலித்தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், இவர்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பல்வேறு நபர்கள் உதவி செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பள்ளேபாளையம் ஊராட்சி சார்பில் இன்று பொதுமக்களுக்கு கொரானோ நிவாரண பொருளாக அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட பத்து லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. 



பெள்ளேபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வட்டாட்சியர் சாந்தாமணி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார் ஆகியோர் ஊராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் தூய்மை பணி மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்களான அரிசி, காய்கறிகளை வழங்கினர். 

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து ஒவ்வொரு பகுதிக்கும் நேரடியாக பொருட்கள் எடுத்துச்செல்லபட்டு வினியோகம் செய்யப்பட்டன. 

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...