கோவை: கோவை மாவட்டம், அன்னூர் காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த 39 வயது பெண் காவலருக்கு கொரானோ தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சிகிச்சைக்காக கோவையில் உள்ள இ எஸ் ஐ மருத்துவமனைக்கு அவர் அனுப்பிவைக்கபட்டார்.
கோவை: கோவை மாவட்டம், அன்னூர் காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த 39 வயது பெண் காவலருக்கு கொரானோ தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சிகிச்சைக்காக கோவையில் உள்ள இ எஸ் ஐ மருத்துவமனைக்கு அவர் அனுப்பிவைக்கபட்டார்.
கோவை மாவட்டத்தில் கொரானோ தொற்று மேலும் பரவாமல் தடுக்க பல தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையத்திற்கு அடுத்தப்படியாக அன்னூர் பகுதியில் கொரானோ தொற்று அதிகரித்து வருவது சற்று அச்சத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது அன்னூர் காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த 39 வயது கொண்ட பெண் காவலர் ஒருவருக்கு தற்போது கொரானோ தொற்று இருப்பது கண்டுபிடிக்கபட்டுள்ளது.
கொரானோ தடுப்பு நடவடிக்கையில் அன்னூர் காவல்நிலைய எல்லைப்பகுதியான கஞ்சப்பள்ளி சோதனை சாவடியில் இவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
நேற்று முன்தினம் அன்னூர் காவல்நிலையத்தில் பணியாற்றிய 53 பேருக்கு பரிசோதனை செய்யபட்டதில், இந்த பெண் காவலருக்கு தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.
இதனையடுத்து அன்னூரில் இருந்து அந்த காவலர் ஆம்புலன்ஸ் மூலம் கோவை இ.எஸ்.ஜ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அருப்பிவைக்கபட்டார், தொடர்ந்து அன்னூர் பகுதியில் கிருமினாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அதேபோல, கடந்த 7ஆம் தேதி அன்னூர் பகுதியில் 5 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் வசித்து வந்த பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டது. மேலும், இந்த பகுதி சிவப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டு,
அதன் 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பொதுமக்கள் வெளியே வரவும், அன்னிய நபர்கள் உள்ளே நுழையவும் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.