குன்னூரில் ஊரடங்கு உத்தரவு மன அழுத்தம் காரணமாக ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை; போலீசார் விசாரணை

நீலகிரி: குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ மையத்தில் பயிற்சி ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக வெலிங்டன் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


நீலகிரி: குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ மையத்தில் பயிற்சி ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக வெலிங்டன் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மதுரையைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் சம்பத் குமார் (20) இவரது தாயார் கவிதா. சம்பத் குமார் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் ராணுவ தேர்வில் தேர்ச்சி பெற்று ராணுவத்தில் சேர்ந்தார். இவர் குன்னூர் அருகேயுள்ள வெலிங்டன் எம்.ஆர்.சிஅவாஹில் ராணுவ முகாமில் பயிற்சி பெற்று வந்தார். 

இந்த நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ராணுவ முகாம் முழுமையாக சீல் வைக்கப்பட்டது. இதனால் பயிற்சி பெறும் இளம் ராணுவ வீரர்கள் முகாமை விட்டு வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. இளம் ராணுவ வீரர் சம்பத் குமாருக்கு வெளியே செல்ல முடியாத நிலை இருந்ததால் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். 

இதனிடையே, சனிக்கிழமை சம்பத் குமார் ராணுவ முகாமை விட்டு வெளியேறி விட்டார். எங்கு தேடியும் காணவில்லை. 



இந்த நிலையில் இளம் ராணுவ வீரர் சம்பத் குமார் குன்னூர், உதகை தேசிய நெடுஞ்சாலையில் பிளாக் பிரிட்ஜ் அருகே தூக்கிட்டு தற்கொலை செய்து இருப்பது தெரிய வந்தது. 

இது குறித்து ராணுவ அதிகாரிகள் வெலிங்டன் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றிய காவல் துறையினர், உடலை குன்னூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...