கோவை: புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி பட்டினி போராட்டம் நடத்திய சிபிஐ(எம்எல்) கட்சியின் கோவை மாநகர செயலாளர் வேல்முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிபிஐ(எம்எல்) கட்சியின் சார்பில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் நேற்று பட்டினி போராட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, தடாகம் சாலை முத்தண்ணன் குளம் அருகே வீடுகள் நிறைந்துள்ள பகுதியில் சிபிஐ(எம்எல்) கட்சியினர் கையில் பதாகைகளை ஏந்தியபடி புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக பட்டினி போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் அக்கட்சியின் மாநகர செயலாளர் வேல்முருகன், ஏஐசிசிடியு அமைப்பின் மாநிலச் செயலாளர் லூயிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது, கொரொனா பாதிப்பு காரணமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர் எனவும் உணவிற்கு சிரமப்படும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மத்திய அரசு 10 ஆயிரம் ரூபாயை நிவாரணமாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போது ஒன்று கூடி போராட்டம் நடத்தியதாக ஆர்.எஸ். புரம் காவல் துறையினர் வேல்முருகன் மற்றும் லூயிஸ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இவர்கள் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், அரசுக்கு எதிராக வதந்தியை பரப்புதல், ஊரடங்கு உத்தரவை மீறுதல், அரசு ஊழியரின் உத்தரவுக்கு கீழ் படியாமை, தொற்று நோய் தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.