கோவையில் உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த 6 வயது சிறுவனை கொலை செய்த தாய், கள்ளக்காதலன் கைது

கோவை: கோவை சாய்பாபா காலனி காவல் எல்லைக்குட்பட்ட கோவில் மேடு அருகே உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் 6 வயது சிறுவனை, தாயும் கள்ளக்காதலனும் சேர்ந்து அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை சாய்பாபா காலனி காவல் எல்லைக்குட்பட்ட கோவில் மேடு அருகே உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் 6 வயது சிறுவனை, தாயும் கள்ளக்காதலனும் சேர்ந்து அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அருண் மற்றும் திவ்யா தம்பதிகளின் மகன் அபிஷேக்(6). இவர்கள் நீலகிரி மாவட்டத்தில் வசித்து வந்தனர். பின்னர் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக திவ்யா தனது கணவரை விட்டு பிரிந்து கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள கோவில் மேடு பகுதிக்கு குடிபெயர்ந்தார். பின்னர் அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிக்குச் சென்றார். 

அப்போது, அங்கு தேனி மாவட்டத்தை சேர்ந்த கால்டாக்சி டிரைவர் ராஜதுரை என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதைத்தொடர்ந்து இருவரும் கணவன் மனைவி போல வாழத் தொடங்கினர். அதேபோல், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ராஜதுரை திவ்யா வீட்டிலேயே தங்கினார்.

இந்த நிலையில், இவர்கள் இருவரும் உல்லாசமாக இருப்பதற்கு சிறுவன் இடையூறாக இருந்ததாக தடியால் சரமாரி தாக்கினர். இதில் சிறுவனின் உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுவன் துடிதுடித்து வீட்டில் முனங்கியபடி இருந்துள்ளான். இந்த நிலையில் உடலில் பல இடங்களில் வீக்கம் ஏற்பட்டு உள்ளதால் டாக்டரிடம் சென்றால் போலீசில் சிக்கி விடுவோம் என்று கருதி மருந்துக் கடையில் வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி சிறுவனுக்கு கொடுத்துள்ளனர்.

ஆனால், சிறுவன் தொடர்ந்து மயக்க நிலையில் இருந்ததால் அதிர்ச்சி அடைந்த திவ்யா பிற்பகல் 3 மணி அளவில் 108 ஆம்புலன்சை அழைத்தார். இதைத்தொடர்ந்து, ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. 

இதையடுத்து ஆம்புலன்ஸ் ஊழியர் காவல் நிலையத்தில் கொடுத்த தகவலின் பேரில் சாய்பாபா காலனி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுவன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக திவ்யா மற்றும் ராஜ துரையை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில் இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 302 மற்றும் 401 ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு ,  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...