கோவை: கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 50 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கோவை: கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 50 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
144 தடை உத்தரவு உள்ள அத்தியாவசிய தேவைகளை தாண்டி பொதுமக்கள் வெளியே வர அனுமதிக்கப்படுவதில்லை. இதனையும் மீறி வெளியே வருபவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்நிலையில், கோவை அடுத்து கருமத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட சோமனூர் பகுதியில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மட்டும், குட்கா பொருட்களை விற்பனை செய்து வருவதாகவும் இதனை அதிக விலைக்கு விற்பதாக தகவல் கிடைத்தது.
இதனிடையே, கிடைத்த தகவலை அடுத்து கோவை மாவட்ட கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தரவின் பேரில் கருமத்தம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் பாலமுருகன் அறிவுரையின் பேரில் ஆய்வாளர் சண்முகம், உதவி ஆய்வாளர் அரவிந்தராஜ், காவலர்கள் மகேந்திரன், பிரகாஷ்ராஜ், யுவராஜ் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, சோமனூர் பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகில் உள்ள பவானி ஏஜன்சீஸ் மற்றும் கருமத்தம்பட்டி மெயின் ரோட்டில் இயங்கி வரும் ராம்தேவ் ஏஜன்சீஸ் ஆகிய கடைகளில் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலம் ஜல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த குப்பாராவ் மற்றும் சிகல்லால் ஆகியோரை கைது செய்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புகையிலை மற்றும் கூல் லிப் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.