கோவையில் தேவையின்றி வெளியில் வரும் பொதுமக்களுக்கு வெளியிடப்பட்ட எமலோகத்தில் ஆஃபர் எனும் கொரோனா விழிப்புணர்வு குறும்படம்!

கோவை: பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்கும் விதமாக கோவையில் வெளியிடப்பட்ட எமலோகத்தில் ஆஃபர் எனும் கொரோனா விழிப்புணர்வு குறும்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

கோவை: பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்கும் விதமாக கோவையில் வெளியிடப்பட்ட எமலோகத்தில் ஆஃபர் எனும் கொரோனா விழிப்புணர்வு குறும்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

உலகம் முழுவதும் பெரும் உயிர்பலிகள் மற்றும் பீதியை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க நாடு முழுவதும் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வரக்கூடாது என்ற விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தை பொறுத்த வரை மக்கள் நடமாட்டத்தை முழுமையாக கட்டுப்படுத்தினாலும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி, சாலைகளில் மக்கள் நடமாடுகின்றனர்.

இந்நிலையில், கோவை பசிஃபிக் மீடியா தயாரிப்பில் எமலோகத்தில் ஆஃபர் எனும் குறும்படத்தை பெரியநாயக்கன்பாளையம் வருவாய் ஆய்வாளர் நூர் முகம்மது கதை, திரைக்கதை, வசனம் எழுத சோபன் சேதுபதி இயக்கியுள்ளார். சுமார் ஆறு நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த குறும்படத்தில் சித்திரகுப்தன் மற்றும் எமதர்மராஜா என இரு வேடங்களை கொண்டு "விழித்திரு விலகி இரு வீட்டிலேயே இரு!" எனும் கருத்தை மையமாக வைத்து குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் வெளியிட்டார். தொடர்ந்து பெரியநாயக்கன்பாளையம் காவல்நிலைய ஆய்வாளர் பிருத்விராஜ் குறும்படத்தை யூ டியூப்பில் வெளியிட்டார்.



கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஒத்துழைப்பு அளிக்காமல் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் நோய் தொற்றுக்குள்ளாகி மரணங்கள் அதிகம் ஏற்படும் எனவும் அதனால் யாரும் வெளியே வராமல் காவல்துறை மற்றும் அரசின் அறிவுரையை மதித்து நடக்க வேண்டி விழிப்புணர்வு ஏற்படுவதற்காக இந்த "எமலோகத்தில் ஆஃபர் டில் 144" எனும் குறும்படத்தை உருவாக்கி உள்ளனர். 

மேலும், காவல் துறையினர் பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வெளியே சுற்றும் பொதுமக்கள் இந்த குறும்படத்தை பார்த்தாவது திருந்துவார்களா என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...