ஆனைமலை புலிகள் காப்பகம் வனச்சரக பகுதியில் புலிகளுக்கு விஷம் வைத்து கொன்ற இருவர் கைது

கோவை: ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரக பகுதியில் இரண்டு புலிகள் விஷம் வைத்து கொன்றது தொடர்பாக போலீசார் இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை: ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரக பகுதியில் இரண்டு புலிகள் விஷம் வைத்து கொன்றது தொடர்பாக போலீசார் இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

கடந்த 9ம் தேதி ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரக பகுதி புங்கன் ஒடை, போத்தமடையில் இரண்டு புலிகள் விஷம் வைத்து கொன்றனர். 

இதையடுத்து, வனத்துறையினர் விசாரணை செய்ததில் ராசு, கருப்புசாமி இருவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் மேலும் இரண்டு பேர் தலைமறைவாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும், பணியில் அலட்சியப் போக்கில் இருந்ததாக வனவர் பிரபாகரன், வனக்காப்பாளர் சபரிநாதன் மற்றும் வனக்காவலர் அஜித் ஆகிய மூவரையும் பணியிடை நீக்கம் செய்துள்ளனர். புலிகள் இறந்த இடங்களை தேசிய புலிகள் ஆணைய அதிகாரிகள் இன்று விசாரணை செய்கின்றனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...