சிறுகுறு தொழில் மின் கட்டணம் குறித்த அறிவிப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும் - பி.ஆர்.நடராஜன் எம்பி

கோவை: சிறுகுறு தொழில் மின் கட்டணம் குறித்த அறிவிப்பை மறு பரிசீலனை செய்திட வேண்டும் என மின்துறை அமைச்சருக்கு பி.ஆர்.நடராஜன் எம்பி கோரிக்கை விடுத்துள்ளார்.

கோவை: சிறுகுறு தொழில் மின் கட்டணம் குறித்த அறிவிப்பை மறு பரிசீலனை செய்திட வேண்டும் என மின்துறை அமைச்சருக்கு பி.ஆர்.நடராஜன் எம்பி கோரிக்கை விடுத்துள்ளார். 

சிறு, குறு தொழில் கூடங்கள் மே 6ம் தேதிக்குள் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்கிற அறிவிப்பை மின்சார துறை அமைச்சர் தங்கமணி மறு பரிசீலனை செய்ய வேண்டும் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கடிதம் வாயிலாக கோரிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் மின்துறை அமைச்சர் தங்கமணி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது;-

தமிழகத்திலுள்ள சிறு, குறு தொழில் கூடங்களுக்கான மின்சார கட்டணங்கள் குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதன்படி மார்ச், ஏப்ரல் மாத மின் கட்டணங்கள் மே 6ம் தேதிக்குள் செலுத்தவேண்டும் என்றும், கணக்கீட்டுப் பணி நடைபெறாததால் ஜனவரி, பிப்ரவரி மாத கணக்கீடு படி கட்ட அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கொரோனா பரவலை தடுத்திட ஊரடங்கு துவங்கிய மார்ச் 25ம் தேதியிலிருந்து இன்று வரை சிறு, குறு தொழிற்கூடங்கள், விசைத்தறி கூடங்கள் உள்ளிட்டவை இயங்காமல் உள்ளது. ஊரடங்கு காரணமாக உற்பத்தி நிறுத்தப்பட்டதால் எதிர்வரும் நாட்களில் கடும் நிதி நெருக்கடியை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

இப்படிப்பட்ட சூழலில், நிறுவனங்கள் துவங்கப்பட்ட உடனே மின் கட்டணங்கள் கட்ட சொல்வது சரியானது அல்ல. இதனால் சிறு, குறு தொழிற்கூடங்கள் மேலும் கடும் நிதி நெருக்கடிக்கு தள்ளப்படும். மேலும், உற்பத்தி நடைபெறாத ஏப்ரல் மாதத்திற்கு உற்பத்தி முழு வீச்சில் இருந்த ஜனவரி, பிப்ரவரி மாத மின் கட்டணத்தை கட்டச் சொல்வது பொருத்தமானதும் அல்ல. சிறு, குறு தொழிற்கூடங்கள் உற்பத்தி துவங்கிய பிறகு, மின் கட்டணங்களை தள்ளுபடி செய்வதா அல்லது தவணை முறையில் கட்டுவதா என்பது குறித்து தொழில் துறையினரிடம் கலந்தோசித்து பின்னர் முடிவு செய்வது தான் பொருத்தமாக இருக்கும். 

எனவே, மின் கட்டணங்கள் குறித்த தங்கள் துறை அறிவிப்பில் மாற்றங்கள் செய்து அறிவிக்க வேண்டும் என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...