நீலகிரி: குன்னூர் எடப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஏழை எளிய மக்களுக்கு ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கோபால்ராஜ் தனது சொந்த செலவில் ஆயிரம் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கினார்.

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக எடப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட அனியாடா, இந்திராநகர், முல்லை நகர் பகுதியில் வசிக்கும் ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்டவை நியாயவிலைக் கடைகளில் விலையில்லாமல் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்குவற்காக இங்கு குடியிருக்கும் ஆயிரம் குடும்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்களில் முதல் கட்டமாக 250 நபர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்க சொந்த பணத்தில் தலா ஒருவருக்கு ஆயிரம் வீதம் 250 நபர்களுக்கு இரண்டரை லட்சம் வழங்கினார்.

மேலும், இரண்டு மற்றும் மூன்றாம் கட்டங்களில் தலா ஆயிரம் வீதம் ஆயிரம் குடும்பங்களுக்கு மொத்தம் 10 லட்சம் வழங்கவுள்ளதாக கோபால்ராஜ் தெரிவித்தார்.