நீலகிரியில் ஒரே நாளில் 35 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் - கைது செய்யப்பட்ட 5 பேரிடம் போலீசார் விசாரணை

நீலகிரி: நீலகிரியில் நேற்று ஒரே நாளில் கூடலூர் மற்றும் நியூஹோப் பகுதியில் பல்வேறு இடங்களில் 35 லிட்டர் சாராய ஊறல் கைப்பற்றப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி: நீலகிரியில் நேற்று ஒரே நாளில் கூடலூர் மற்றும் நியூஹோப் பகுதியில் பல்வேறு இடங்களில் 35 லிட்டர் சாராய ஊறல் கைப்பற்றப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் அவர்கலுக்கு வந்த தகவலை அடுத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபி அவர்கள் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்காணித்து கள்ளச்சாராயம் விற்பவர்களை கண்டுபிடித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், இன்று கூடலூர் காவல் ஆய்வாளர் சிவக்குமார் அவர்களுக்கு தொலைபேசி மூலம் கூடலூர் ஆனைசெத்த கொல்லி பகுதியில் கள்ளச்சாராயம் இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அவரது தலைமையிலான தனிப்படையினர் மணிதுரை, சியாபுதீன், குனா, மணி ஆகியோர் கொண்ட தனிப்படையினர் குறிப்பிட்ட இடத்தில் கண்காணித்து பிரதீப் என்பவனை பிடித்து விசாரணை நடத்தி அவனிடமிருந்து சாராயத்தை பறிமுதல் செய்தனர். 



மேலும், அவனிடம் நடத்திய விசாரணையில் அதே பகுதியில் வேறு சிலர் கள்ளச்சாராயம் காய்சுவதாக கிடைத்த தகவலின் பேரில் கண்காணித்து அதே பகுதியைச் சேர்ந்த காளிசெல்வன், விஜய் என்ற இருவரை பிடித்து அவர்களிடமிருந்து 16 லிட்டர் ஊறல் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல, முருகேசன் என்பவனை பிடித்து அவனிடமிருந்து 15 லிட்டர் ஊறல் சாராயம் கைப்பற்றப்பட்டது. மேலும், பெரியசோலை பகுதியில் வைத்து சுபேஷ் என்பவரை பிடித்து அவரிடமிருந்து 7 லிட்டர் ஊறல் சாராயம் கைப்பற்றப்பட்டது.

நீலகிரியில் நேற்று ஒரே நாளில் கூடலூர் மற்றும் நியூஹோப் பகுதியில் 35 லிட்டர் ஊறல் சாராயம் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...