ஊடகத்துறையினருக்கு கொரோனா வைரஸ் குறித்த சோதனை மேற்கொள்ள வேண்டும் - திருப்பூர் மாவட்ட செய்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தல்

திருப்பூர்: ஊடகத்துறையினருக்கு கொரோனா வைரஸ் குறித்த சோதனையை மேற்கொள்ள வேண்டுமென என திருப்பூர் மாவட்ட செய்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

திருப்பூர்: ஊடகத்துறையினருக்கு கொரோனா வைரஸ் குறித்த சோதனையை மேற்கொள்ள வேண்டுமென என திருப்பூர் மாவட்ட செய்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 

இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட செய்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளதாவது;-

நாடு முழுவதும் கொரோனோ வைரஸ் மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் ஏற்கனவே ஒரு செய்தியாளர் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரக்கூடிய சூழ்நிலையில் சென்னையில் இரண்டு செய்தியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் ஊடகத்தினரின் குடும்பங்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இக்கட்டான இந்த காலகட்டத்தில் பொதுமக்களுக்கு நம்பிக்கை ஊட்டக்கூடிய வகையிலும் அரசு மேற்கொண்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்களிடம் செய்திகள் வழி கொண்டு செல்லக்கூடிய அத்தியாவசிய பணியை மேற்கொண்டு வரும் ஊடகத்தினரின் பணி இன்றியமையாத சூழ்நிலையில் பரவலாக உள்ள அச்சத்தை போக்கும் வகையில் தமிழக அரசு மாவட்டம்தோறும் உள்ள ஊடகத் துறையினருக்கு கொரோனா வைரஸ் தொற்று குறித்த சோதனையை மேற்கொள்ள வேண்டுமென திருப்பூர் மாவட்ட செய்தியாளர்கள் ( TDJA ) சங்கம் தமிழக அரசுக்கும், திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தையும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...