கோவை: கோவை சாய்பாபா காலனி காவல் எல்லைக்குட்பட்ட கோவில் மேடு அருகே 6 வயது சிறுமி உடலில் பல காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை சாய்பாபா காலனி காவல் எல்லைக்குட்பட்ட கோவில் மேடு அருகே 6 வயது சிறுவன் உடலில் பல காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கோவில்மேடு பகுதியை சேர்ந்த ராஜதுரையின் மகன் அபிஷேக் (6). இந்த சிறுவன் இன்று மதியம் திடீரென உடல்நிலை மோசமாகி மயக்கம் அடைந்ததாக சிறுவனின் பெற்றோர் அவரை ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்ல கோவில் மேடு செக்போஸ்ட் அருகே தூக்கி வந்தனர்.
இதைத் தொடர்ந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சிறுவனின் உடல்நிலையை பரிசோதனை செய்த போது சிறுவன் உயிரிழந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சிறுவனின் உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.
மேலும், இந்த சிறுவனின் மரணம் தொடர்பாக சாய்பாபா காலனி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த சிறுவனின் உடல் முழுவதும் தடித்த நிலையில் பல காயங்கள் இருந்துள்ளது. ஆகவே, சிறுவன் கொடூரமான முறையில் சித்திரவதைபடுத்தி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் சாய்பாபா காலனி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.