குழந்தையை பெற்றெடுத்து சில நாட்களே ஆன வால்பாறையை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று அதிகாலை அவர் வீட்டிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அழைத்துச் வரப்பட்டார்.
கோவை: குழந்தையை பெற்றெடுத்து சில நாட்களே ஆன வால்பாறையை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று அதிகாலை அவர் வீட்டிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அழைத்துச் வரப்பட்டார்.
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்தும் பொருட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இருப்பினும் இந்த தொற்றினால் பல தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை அடுத்த காளியாபுரம் பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண் கடந்த 12ம் தேதி பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து அந்த பெண்ணுக்கு கடந்த 15ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. பின்னர் அந்த பெண்ணுக்கு எடுக்கப்பட்ட கொரோனா தொற்று பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து அந்த பெண்ணை கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அதேபோல, இன்று பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்த்த வால்பாறையை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க மாற்றுத்திறனாளி
பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த பெண் கடந்த 10ஆம் தேதி பிரசவத்திற்காக வால்பாறை அரசு மருத்துவமனையில் இருந்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதைத் தொடர்ந்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடந்த 11ஆம் தேதி இந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
பின்னர், நேற்று அவர் மருத்துவமனையிலிருந்து தனது குழந்தையுடன் வால்பாறையில் உள்ள எஸ்டேட் குடியிருப்பிற்கு சென்றார். ஆனால், எஸ்டேட் நிர்வாகம் அங்கு அவரை தங்க அனுமதி மறுத்ததையடுத்து அவர் வால்பாறை நகரப்பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றார்.
இதைத்தொடர்ந்து மருத்துவ பரிசோதனையில் அந்த பெண்ணுக்கு கொரோனா
தொற்று உறுதியானதையடுத்து
இன்று அதிகாலை மருத்துவக்குழுவினர் அந்தப் பெண், அவரது குழந்தை மற்றும் அவரது சித்தி ஆகியோரை 108 ஆம்புலன்ஸ் மூலம் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இதைத்தொடர்ந்து அந்தப்பெண் தங்கியிருந்த வீடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளை
"நோ மூவ்மண்ட் சோன்" ( No Movement Zone) என அறிவித்து மக்கள் நடமாட்டத்தை முற்றிலும் தடை செய்து கிருமிநாசினி தொளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஒரே வாரத்தில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்கப்பட்ட இரண்டு கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.