இரு தினங்களுக்கு முன்பு பிரசவித்த வால்பாறையை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி

குழந்தையை பெற்றெடுத்து சில நாட்களே ஆன வால்பாறையை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று அதிகாலை அவர் வீட்டிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அழைத்துச் வரப்பட்டார்.



கோவை: குழந்தையை பெற்றெடுத்து சில நாட்களே ஆன வால்பாறையை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று அதிகாலை அவர் வீட்டிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அழைத்துச் வரப்பட்டார்.

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்தும் பொருட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இருப்பினும் இந்த தொற்றினால் பல தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை அடுத்த காளியாபுரம் பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண் கடந்த 12ம் தேதி பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து அந்த பெண்ணுக்கு கடந்த 15ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. பின்னர் அந்த பெண்ணுக்கு எடுக்கப்பட்ட கொரோனா தொற்று பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து அந்த பெண்ணை கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அதேபோல, இன்று பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்த்த வால்பாறையை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க மாற்றுத்திறனாளி

பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த பெண் கடந்த 10ஆம் தேதி பிரசவத்திற்காக வால்பாறை அரசு மருத்துவமனையில் இருந்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதைத் தொடர்ந்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடந்த 11ஆம் தேதி இந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

பின்னர், நேற்று அவர் மருத்துவமனையிலிருந்து தனது குழந்தையுடன் வால்பாறையில் உள்ள எஸ்டேட் குடியிருப்பிற்கு சென்றார். ஆனால், எஸ்டேட் நிர்வாகம் அங்கு அவரை தங்க அனுமதி மறுத்ததையடுத்து அவர் வால்பாறை நகரப்பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றார்.

இதைத்தொடர்ந்து மருத்துவ பரிசோதனையில் அந்த பெண்ணுக்கு கொரோனா

தொற்று உறுதியானதையடுத்து

இன்று அதிகாலை மருத்துவக்குழுவினர் அந்தப் பெண்,  அவரது குழந்தை மற்றும் அவரது சித்தி ஆகியோரை 108 ஆம்புலன்ஸ் மூலம் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இதைத்தொடர்ந்து அந்தப்பெண் தங்கியிருந்த வீடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளை

"நோ மூவ்மண்ட் சோன்" ( No Movement Zone) என அறிவித்து மக்கள் நடமாட்டத்தை முற்றிலும் தடை செய்து கிருமிநாசினி தொளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

ஒரே வாரத்தில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்கப்பட்ட இரண்டு கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...