கோவை: கோவை குனியமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் ட்ரோன் கேமரா மூலம் மக்கள் நடமாட்டத்தை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. வரும் இரண்டு வாரங்கள் மிக முக்கியமான வாரங்கள் என்பதால் ஊரடங்கை உத்தரவை போலீசார் கடுமையாக்கி வருகின்றனர்.
அத்தியாவசிய தேவைகளின்றி சாலையில் சுற்றுவோரின் வாகனங்களில் வண்ணப் பெயிண்ட் பூசப்பட்டு மறு முறை வந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கின்றனர். ஆனால் தற்போது ஒவ்வொரு பகுதிகளில் இளைஞர்கள் கூடி பேசுவது விளையாடுவது போன்ற செயல்படுவதால் நகர் புறங்களில் உள்ள தெருக்களை ட்ரோன் கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக கோவை குனியமுத்தூர் போலீசார் கோவைப்புதூர், இடையர்பாளையம், பி.கே.புதூர், குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளை ட்ரோன் கேமராக்கள் மூலம் மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியை துவங்கி உள்ளனர்.
அதேபோல, தனிமை படுத்தப்பட்ட பகுதியில் இருந்து யாரேனும் வெளியேறுகிறார்களா என்பதையும் கண்காணிக்கின்றனர். கேமராவை பார்த்தால் கூடி நிற்கும் பொதுமக்கள் உடனடியாக வீடுகளுக்கு செல்வதால் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் வரை ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணி தொடரும் என தெரிவித்துள்ளனர்.
இதேபோல் போத்தனூர் சுந்தராபுரம் பகுதிகளிலும் ட்ரோன் மூலம் மக்கள் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.