வரும் ஏப்ரல் 20ம் தேதி முதல் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் ஊழியர்கள் பணிக்கு திரும்ப உத்தரவு!

கோவை: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் ஊழியர்கள் வரும் ஏப்ரல் 20ம் தேதி பணிக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவை: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் ஊழியர்கள் வரும் ஏப்ரல் 20ம் தேதி பணிக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது. 

இது குறித்து வேளாண் பல்கலைக்கழகத்தின் அனைத்து டீன்களுக்கும் அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. அனைத்து பல்கலைக்கழக அலுவலர்கள், துறைகளின் தலைவர், கே.வி.கேக்கள் ஏப்ரல் 20ம் தேதி முதல் பணிக்கு திரும்ப அறிக்கை அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் பிற விவசாய கல்லூரிகளின் முழு வளாகத்தையும் கிருமிநாசினிகளுடன் தூய்மைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல, ஊழியர்களின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்ய வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் பிற விவசாய கல்லூரிகளுக்கு மருத்துவ குழு நியமிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கோவை மாவட்டத்தில் 127 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் இரண்டாவது இடத்தில் உள்ள நிலையில், தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ள ஊழியர்களை , இன்னும் இரண்டு நாட்களில் பணிக்கு திரும்ப உத்தரவிட்டது ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...