கூடலூரை அருகே குனில்வயல் கிராமத்தில் வீடுகளை சேதப்படுத்தி காட்டு யானைகள் அட்டகாசம்!

நீலகிரி: கூடலூரை அடுத்த குனில்வயல் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டை காட்டு யானைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக இரவு தாக்கி சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

நீலகிரி: கூடலூரை அடுத்த குனில்வயல் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டை காட்டு யானைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக இரவு தாக்கி சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள குனில்வயல் கிராமத்தில் புதன்கிழமை நள்ளிரவில் நுழைந்த யானைகள் சுப்பிரமணியம் என்பவரது வீட்டை தாக்கி சேதப்படுத்தின. அதிர்ஷ்டவசமாக வீட்டிலிருந்தவர்கள் உயிா்தப்பினா்.

இதைத் தொடா்ந்து அப்பகுதிக்கு வியாழக்கிழமை நள்ளிரவு வந்த அந்த யானைகள் மீண்டும் சுப்பிரமணியத்தின் வீட்டைத் தாக்கி முற்றிலுமாக சேதப்படுத்தியுள்ளன. வீடு சேதமடைந்ததால் அக்குடும்பத்தினர் அருகிலுள்ள வீட்டில் தங்கியுள்ளனர்.

இது குறித்து தகவலறிந்த கூடலூா் போக்குவரத்து உதவி ஆய்வாளா் பாக்கியநாதன், காவலா் பிரமோத் ஆகியோா் வியாபாரி ஒருவரின் உதவியுடன் உணவுப் பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றை வாங்கி அந்த குடும்பத்துக்கு வழங்கினா்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...