சத்தியமங்கலம் அருகே கூண்டில் சிக்கிய சிறுத்தை தெங்குமரஹாடா வனப்பகுதியில் விடுவிப்பு!

ஈரோடு: சத்தியமங்கலத்தில் கால்நடைகளைத் தாக்கிக் கொன்ற சிறுத்தை கூண்டில் சிக்கிய நிலையில், மயக்க ஊசி செலுத்தப்பட்டு தெங்குமரஹாடா வனப் பகுதியில் விடுவிக்கப்பட்டது.


ஈரோடு: சத்தியமங்கலத்தில் கால்நடைகளைத் தாக்கிக் கொன்ற சிறுத்தை கூண்டில் சிக்கிய நிலையில், மயக்க ஊசி செலுத்தப்பட்டு தெங்குமரஹாடா வனப் பகுதியில் விடுவிக்கப்பட்டது. 

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப் பகுதியில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன. தற்போது வனப்பகுதியில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் வனப் பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் அருகே உள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் வளா்க்கும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளைத் தாக்கிக் கொல்வது தொடர்கதையாகி உள்ளது.

இந்நிலையில், சத்தியமங்கலம் அருகே பெரியகுளம் பகுதியில் கடந்த ஒரு மாதமாக விவசாயத் தோட்டங்களில் உலா வரும் சிறுத்தை கால்நடைகளைத் தாக்கிக் கொன்று வருகிறது. கடந்த வாரம் குப்புசாமி என்பவரது விவசாயத் தோட்டத்தில் புகுந்த சிறுத்தை, ஆடு ஒன்றைக் கடித்து இழுத்துச் செல்லும் காட்சி அங்கு பொருத்தப்பட்ட கேமராவில் பதிவானது.

இதைத் தொடா்ந்து வனத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று அப்பகுதியில் கூண்டு வைத்தனா். பிரத்யேகமாக அமைக்கப்பட்ட கூண்டின் ஒரு பகுதியில் நாயை வைத்து கண்காணித்தனா். 



இந்நிலையில், அப்பகுதியில் உள்ள பெருமாள் என்பவரது தோட்டத்தில் வைக்கப்பட்ட கூண்டில் சிறுத்தை சிக்கியது.

இதைக் கண்ட அப்பகுதி விவசாயிகள் சத்தியமங்கலம் வனத் துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்குச் சென்ற வனத் துறையினா் கூண்டில் சிக்கிய சிறுத்தையை மீட்டனா். 



இதையடுத்து, வனத் துறை கால்நடை மருத்துவரை சம்பவ இடத்துக்கு வரவழைத்து, சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு தெங்குமரஹாடா வனப் பகுதியில் சிறுத்தை விடப்பட்டதாக வனத்துறையினா் தெரிவித்தனா்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...