கோவையில் ரேபிட் டெஸ்ட் கிட் கருவி பரிசோதனை துவக்கம்..! இரண்டு நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் நெகட்டிவ் என முடிவு!

கோவை: தமிழகத்திற்கு புதிதாக 25 ஆயிரம் ராபிட் டெஸ்ட் கிட்டுகள் வந்துள்ள நிலையில், கோவைக்கு இன்று 2000 கிட்டுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த ராபிட் டெஸ்ட் கிட்டுகளை பயன்படுத்தி மேற்கொள்ளும் கொரோனா பரிசோதனையை அமைச்சர் எஸ் பி வேலுமணி கோவை அரசு மருத்துவமனையில் துவங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து அறிகுறி உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.


கோவை: தமிழகத்திற்கு புதிதாக 25 ஆயிரம் ராபிட் டெஸ்ட் கிட்டுகள் வந்துள்ள நிலையில், கோவைக்கு இன்று 2000 கிட்டுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த ராபிட் டெஸ்ட் கிட்டுகளை பயன்படுத்தி மேற்கொள்ளும் கொரோனா பரிசோதனையை அமைச்சர் எஸ் பி வேலுமணி கோவை அரசு மருத்துவமனையில் துவங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து அறிகுறி உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் இருந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறும்போது;-

மே 3ம் தேதிக்குள் கோவையில் கொரோனா தொற்று கட்டுக்குள் வரும் என்று எதிர்ப்பார்பதாகவும் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். 

அனைத்து மாவட்டங்களும் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் பொறுப்பாக அமர்த்தப்பட்டுள்ளனர். கோவையில் 127 பேர் பாதிக்கப்பட்டு 26 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த நான்கு நாட்களில் 2025 பேருக்கு நடத்திய சோதனையில் 2 பேருக்கு மட்டும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார். 

கோவை மாநகரில் 10 பகுதிகளும் புறநகர் பகுதியில் 8 பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. கோவை அரசு மருத்துவமனை, இஎஸ்ஐ மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஏழு பரிசோதனை கருவிகள் உள்ளதாக கூறினார். 



அதேபோல, பாதிப்புள்ள அனைத்து பகுதியிலும் அறிகுறிகளின் படி அனைவருக்கும் இந்த கிட்டு மூலம் பரிசோதனை செய்யப்படும்.



மேலும் விரைவாக மேற்கொள்ளும் இந்த பரிசோதனை மூலம் தற்போது இருவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என தெரியவந்துள்ளது.

அதேபோல் அத்யாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்க கூடாது. விற்றால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். முதலமைச்சர் நிவாரண நிதியாக கோவையில் மட்டும் 11 கோடி பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

வருகின்ற 3 ஆம் தேதிக்குள் கோவையில் கொரோனா தொற்று கட்டுக்குள் வரும் எனவும் இதற்கு 98% மக்கள் ஒத்துழைப்பு தருகின்றனர். மீதம் உள்ளவர்களும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றார்.

இந்த நிகழ்வின் போது, கோவை மாவட்ட ஆட்சியர், கோவை அரசு மருத்துவமனையின் பொறுப்பு முதல்வர் காளிதாஸ் மற்றும் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...