கோவை: தமிழகத்தில் மேலும் 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1323 ஆக அதிகரித்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனோ வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த தொற்றினால் பொதுமக்கள் அதிகாரிகள் என பல தரப்பினர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் மருத்துவர்களும் தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் மேலும் 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1323 ஆக உயர்ந்துள்ளது. 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 283 பேர் குணமடைந்துள்ளனர்.
இதில் கோவையில் யாருக்கும் புதிதாக பாதிப்பு ஏற்படவில்லை. கோவையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 127 ஆக உள்ளது.
அதேபோல, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் இன்று யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.