கோவையில் இருந்து கை குழந்தையுடன் சொந்த ஊருக்கு நடந்தே சென்ற பொதுமக்கள்..! உடனடியாக பாஸ் வழங்கி சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த திருப்பூர் மாவட்ட ஆட்சியர்!

கோவை: கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியில் இருந்து, 30க்கும் மேற்பட்ட விசைத்தறி கூலி தொழிலாளர்கள், வறுமை காரணமாக கை குழந்தையுடன் தங்கள் சொந்த ஊருக்கு நடந்தே சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியில் இருந்து, 30க்கும் மேற்பட்ட விசைத்தறி கூலி தொழிலாளர்கள், வறுமை காரணமாக கை குழந்தையுடன் தங்கள் சொந்த ஊருக்கு நடந்தே சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா நோய்த் தொற்று பரவாமல் இருக்க நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு ஒட்டுமொத்த பணிகளையும் ஸ்தம்பிக்கச் செய்து, வாழ்வாதாரங்கள் குறித்து கேள்வி எழுப்பி வருகிறது. 

ஏழை எளிய மக்கள் பயணம் செய்து வந்த பயணிகள் பேருந்து போக்குவரத்து, ரயில் சேவை மே 3ம் தேதி தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள், வெளியூரில் வேலை பார்த்து வருபவர்கள் என அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர், கோவை, கருமத்தம்பட்டி அடுத்த முத்துகவுண்டன் புதூர் பகுதியில் 4 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை பார்த்து வந்தனர். தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளதால், அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளது. 

இதன் காரணமாக வேலை இல்லாமல் இருந்த விசைத்தறி ஊழியர்கள் உணவுக்காக விசைத்தறி உரிமையாளர் அட்வான்ஸ் முறையில் பணம் கொடுத்துள்ளார். ஊரடங்கு நிலை சீரானதும் வேலை செய்து அட்வான்ஸ் தொகையை கழித்து விட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இதனால் அச்சம் அடைந்த தொழிலாளர்கள் அங்கிருந்து தங்களது சொந்த ஊருக்கு நடந்தே செல்வது என்று முடிவு செய்து இன்று அதிகாலை அங்கிருந்து கிளம்பி சென்றனர். 



இந்த நிலையில், இன்று மதியம் திருப்பூர் வந்தடைந்த அவர்கள் திருப்பூரிலிருந்து காங்கேயம் நோக்கி நடந்து சென்றனர். 



இதில் தனசேகர்(23) தனது மனைவி மற்றும் கைகுழந்தையுடன் காங்கேயம் சாலை முத்து கவுண்டன் புதூர் பகுதியில் நடந்து சென்றபோது அவர்கள் அணிந்திருந்த செருப்பு அறுந்தது. 

இதனால் வெயிலில் மேற்கொண்டு அவர்களால் நடக்க முடியவில்லை இதையடுத்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு அவர்களுக்கு மதிய உணவு அளித்து செருப்புகளை வழங்கினர். 

இதுகுறித்து தனசேகர் கூறுகையில், தற்போது ஊரடங்கு உத்தரவால் அனைத்து விசைத்தறி கூடங்களும் மூடப்பட்டுள்ளது. இதனால் எங்களுக்கு தற்போது எந்த வேலையும் இல்லாமல் உணவுக்கு மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம். விசைத்தறி உரிமையாளரும் உங்கள் கணக்கில் வரவு வைத்துக் கொண்டு பணம் தருகிறார். ஊரடங்கு நிலை சீரானதும் வேலை செய்து வைத்துக்கொள்ள சொல்கிறார். இதனால் எங்களுக்கு கடன் சுமை அதிகமாகி வருகிறது. 

எனவே, நாங்கள் சொந்த ஊருக்கு நடந்தே செல்வது என தீர்மானித்து இன்று நடந்து சென்றோம். ஆனால் வழியில் எனக்கும் எனது மனைவியின் செருப்பும் அறுந்துவிட்டதால் எங்களால் மேற்கொண்டு நடக்க முடியவில்லை. எங்களது நிலையை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

பின்னர் இது குறித்து உடனடியாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் உடனடியாக அவர்களுக்கு பாஸ் வழங்கி, சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...