கொரோனா தொற்று பரவலைத் தடுக்க பல வழிகளில்‌ உதவிட முன்வந்துள்ள வேளாண் பல்கலைக்கழகம்!

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌ கொரோனா தொற்றை சமாளிப்பதற்கு பல வழிகளில்‌ உதவிட முன்வந்துள்ளது.

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌ கொரோனா தொற்றை சமாளிப்பதற்கு பல வழிகளில்‌ உதவிட முன்வந்துள்ளது.

கொரோனா தொற்று நோய்க்கு எதிரான ஊரடங்கினால்‌ அனைத்து நிலை மக்களும்‌ பாதிக்கப்பட்ட நிலையில்‌ மிக மோசமான பாதிப்பை விவசாயமும்‌ விவசாயத்தைச்‌ சார்ந்தவர்களும்‌ சந்தித்து வருகிறார்கள்‌. 

கொரோனா ஊரடங்கின்‌ தாக்கம்‌ விவசாய நடைமுறைகளில்‌ தொழிலாளர்‌ பற்றாக்குறை, போக்குவரத்துக்கான தடை, மாநில எல்லைகளுக்கிடையேயான தடை, பழங்கள்‌, காய்கறிகள்‌ மற்றும்‌ பூக்களை விற்பனை செய்ய இயலாமை மற்றும்‌ அவற்றை முறையாக பாதுகாக்கும்‌ வசதியின்மை போன்ற காரணங்களால்‌ விவசாயிகள்‌ பெருமளவில்‌ பாதிக்கப்பட்டுள்ளனர்‌.

தமிழக அரசு வேளாண்மைத்‌ துறையின்‌ மூலமாக மாவட்ட அளவில்‌ குழுக்களை அமைத்து வேளாண்‌ விளைபொருட்களை விற்பனை செய்வதற்கு ஏதுவாக குளிர்பதனக்‌ கிடங்குகளில்‌ கட்டணமின்றி சேமித்து வைக்க இந்த ஊரடங்கு காலத்தில்‌ உதவியுள்ளது. மேலும்‌, விவசாய பெருமக்கள்‌ தங்களது விளைபொருட்களை வயல்களிலிருந்து சந்தைக்கு எடுத்துச்‌ செல்வதற்கு கட்டணமில்லா போக்குவரத்தையும்‌ செய்து உதவியுள்ளது. இவ்வுதவியானது விவசாய பெருமக்களுக்கு பெரும்‌ உதவியாக உள்ளது.



இந்த இக்கட்டான சூழ்நிலையில்‌ இந்தியாவில்‌ வேளாண்மை கல்வி மற்றும்‌ ஆராய்ச்சியில்‌ சிறந்து விளங்கும்‌ தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, விவசாயிகளுக்கும்‌ பொதுமக்களுக்கும்‌ பயனளிக்கும்‌ வகையில்‌ பல வழிகளில்‌ உதவி செய்து வருகின்றது. இச்சூழலில்‌ பல்கலைக்கழக துணைவேந்தர்‌ முனைவர்‌ நீ. குமார்‌ அவர்கள்‌ அனைத்து வேளாண்‌ விஞ்ஞானிகளையும்‌ காணொலிக்‌ காட்சியின்‌ மூலமாக தொடர்பு கொண்டு ஓவ்வொரு மாவட்டத்திலும்‌ உள்ள வேளாண்மை மற்றும்‌ தோட்டக்கலைத்துறை அலுவலர்களுடன்‌ இணைந்து விவசாயப்‌ பெருமக்களுக்கு உதவிடுமாறு அறிவுறுத்தினார்‌. 

மேலும்‌, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌ கீழக்கண்ட பன்முக உதவிகளை இத்தருணத்தில்‌ தமிழக மக்களுக்கும்‌ விவசாயப் பெருமக்களுக்கும்‌ செய்து வருகிறது.

1. தமிழக விவசாயிகளுக்கு பயிர்‌ தொழில்நுட்பம்‌ சார்ந்த உதவி: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழத்தின்‌ கீழ்‌ இயங்கும்‌ 39 ஆராய்ச்சி நிலையங்கள்‌, 14 வேளாண்‌ கல்லூரிகள்‌ மற்றும்‌ 14 அறிவியல்‌ நிலையங்களில்‌ பணிபுரியும்‌ வேளாண்‌ விஞ்ஞானிகளை அந்தந்த மாவட்டத்தில்‌ உள்ள விவசாய பெருமக்களுக்கு தமிழக அரசின்‌ வேளாண்மைத்துறையுடன்‌ இணைந்து பயிர்‌ தொழில்நுட்பம்‌ சேர்ந்த உதவிகளை செய்யுமாறு பணித்துள்ளார்‌.

2. எதிர்வரும்‌ வேளாண்‌ பருவத்திற்கான முன்னெச்சரிக்கை: எதிர்வரும்‌ பருவமழையினை எதிர்கொள்ளும்‌ விதமாக இந்திய வானிலை ஆராய்ச்சி நிலையம்‌ மற்றும்‌ தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌ தெரிவித்த மழை முன்னறிவிப்பின்படி பல்கலைக்கழக ஆராய்ச்சி இயக்குனரே அனைத்து வேளாண்‌ ஆராய்ச்சி நிலையங்களிலுள்ள விஞ்ஞானிகளை வேளாண்‌ இடுபொருட்களான விதைகள்‌, நடவு பொருட்கள்‌ மற்றும்‌ உயிர்‌ மூலப்பொருட்களை போதிய அளவில் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்க தயாராக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்‌.

3. தமிழக விவசாயம்‌ தங்கு தடையின்றி நடைபெற பல்கலைக்கழகம்‌ நடவடிக்கை: அனைத்து ஆராய்ச்சி நிலையங்கள்‌ மற்றும்‌ வேளாண்‌ அறிவியல்‌ நிலையங்களின் தலைவர்கள்‌ தங்கள்‌ மாவட்ட விவசாயிகளுக்கு பின்‌ நேர்த்தி மற்றும்‌ கால்நடைகளின்‌ பாதுகாப்பினை உறுதி செய்து விவசாயிகளுக்கு சமூக இடைவெளி, சுகாதாரத்தினைப்‌ பின்பற்று உதவிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும்‌, இத்தருணத்தில்‌ பல்கலைக்கழகம்‌ விவசாய பெருமக்களை அவரவர்‌ மாவட்டங்களில் உள்ள ஆராய்ச்சி நிலையம்‌ மற்றும்‌ வேளாண்‌ அறிவியல்‌ நிலையங்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டு கோடை மழையின் போது கோடை உழவு செய்திடுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.



4. தூய்மைப்‌ பணியாளர்கள்‌ மற்றும்‌ பண்ணைத்‌ தொழிலாளர்களுக்கு உதவி: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ ஆசிரியர்கள்‌ மற்றும்‌ புரவலர்‌, மகளிர்‌ மன்றம் மற்றும்‌ அதன்‌ உறுப்பினர்கள்‌ இணைந்து ரூ.300 மதிப்புள்ள காய்கறிப்‌ பைகளை பல்கலைக்கழகத்தில்‌ உள்ள 400 தூய்மைப்‌ பணியாளர்கள்‌ மற்றும்‌ பண்ணைத் தொழிலாளர்களுக்கு வழங்கினர்‌. மேலும்‌ பல்கலைக்கழக துணைவேந்தர்‌ முனைவர்‌ நீ.குமார்‌ அவர்கள்‌ ரோட்டரி கிளப்‌ உதவியுடன்‌ 70 தூய்மைப்‌ பணியாளர்களுக்கு முகக்‌ கவசம்‌ மற்றும்‌ கையுறைகளையும்‌ வழங்கினார்‌.

5. மருத்துவத்‌ துறைக்கு பல்கலைக்கழகத்தின்‌ தொழில்‌ நுட்ப உதவி: விவசாயிகளுக்கு வழங்கப்படும்‌ உதவியோடு மட்டுமல்லாமல்‌ கொரோனா தொற்று நோயைக்‌ கண்டறிவதற்குப்‌ பயன்படுத்தப்படும்‌ ஆர்டி-பி.சி.அர். தொழில்நுட்பத்தைப்‌ பற்றிய பயிற்சிக்கு கைகொடுப்பதற்காக கோவையில்‌ உள்ள இ.எஸ்‌.ஐ. மற்றும்‌ சி.எம்‌.சி., மருத்துவமனைகளுக்கு தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌ தொழில்நுட்ப ஆதரவையும்‌ வழங்குகிறது. பல்கலைக்கழக தாவர மூலக்கூறு மற்றும்‌ உயிரியல் மையமானது கொரோனா தொற்றை உறுதிப்படுத்த கண்டறியும்‌ கருவிகளில்‌ ஒன்றான ஆர்‌.டி-பி.சி.ர்‌. தொழில்நுட்பத்தில்‌ நிபுணத்துவம்‌ பெற்றுள்ளது. இம்மையமானது ஆர்டி-பி.சி.ஆர்‌.-ஐ கையாள்வது குறித்த தொழில்நுட்பத்தினை இ.எஸ்‌.ஐ. மருத்துவமனையின்‌ நுண்ணுயிரியல்‌ துறை வல்லுனர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது. இந்த இக்கட்டான கொரோனா பாதிப்பு காலத்தில்‌ தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ உதவி மருத்துவத்துறைக்கு இன்றியமையாத பங்களிப்பாக விளங்குகிறது.

6. மருத்துவத் துறைக்கு பல்கலைக்கழத்தின்‌ உபகரண உதவி: பல்கலைக்கழக துணைவேந்தர்‌ முனைவர்‌ நீ. குமார்‌ அவர்கள்‌ இ.எஸ்‌.ஐ. மருத்துவமனையில் நடைபெற்றுக்‌ கொண்டிருக்கும்‌ கொரோனா பற்றிய ஆரம்ப பரிசோதனைக்காக 100 கொரேனா சோதனைக்கு பயன்படும்‌ மாதிரி தனிமங்களை இலவசமாக வழங்கினார்‌. மேலும்‌, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌ பரிசோதனைகளை விரைவுபடுத்த ஏதுவாக இரண்டு ஆர்‌.டி-பி.சி.ஷா்‌ இயந்திரங்களையும்‌ கோவை மற்றும்‌ மதுரை மருத்துவமனைகளுக்கு கொடுத்துள்ளது.

7. தொற்று நோய்க்‌ கிருமிகளை அழிக்கும்‌ நானோ தொழில்நுட்பம்‌: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ நானோ அறிவியல்‌ துறையானது நானோ சுத்திகரிப்பு திரவத்தை (சானிடைசர்‌) உருவாக்கியுள்ளது. இது நுண்ணுயிர்‌ நோய் கிருமிகளுக்கு எதிராக 30-45 நிமிடங்கள்‌ வரை செயல்பட்டு கிருமி தாக்குதலை குறைக்கிறது. மேலும்‌, முகக்‌ கவசங்களில்‌ நானோ இலைக்‌ கற்றைகளைப்‌ பயன்படுத்தும்‌ தொழில்நுட்பத்தையும்‌ ஆராய்ந்து வருகிறது.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...