கோவை: கோவையில் தனது ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கிய ஆயுதப்படை தலைமை காவலருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தொழில்துறையினர், சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்களால் முடிந்த அளவு கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தங்களது பங்களிப்பை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், கோவை ஆயுதப்படையில் பணிபுரியும் முதுநிலை காவலர் பாபு எண்:1018 தனது ஒரு மாத சம்பள பணம் 25,788 ரூபாயை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினார்.
இதற்கான காசோலையை மாவட்ட கண்காணிப்பாளர் சுஜித்குமாரிடம் வழங்கினார். ஆயுதப்படை தலைமை காவலரின் இந்த செயலை உயர் அதிகாரிகள், சக பணியாளர்கள் உள்ளிட்டோர் பாராட்டி வருகின்றனர்.