கோவை ஆனைமலை பகுதியில் குழந்தையை பெற்றெடுத்த தாய்க்கு கொரோனா தொற்று உறுதி!

கோவை: கோவை பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பகுதியில் குழந்தையை பெற்றெடுத்த தாய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது.

கோவை: கோவை பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பகுதியில் குழந்தையை பெற்றெடுத்த தாய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது.

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதை கட்டுப்படுத்தும் பொருட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இருப்பினும் இந்த தொற்றினால் பல தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை அடுத்த காளியாபுரம் பகுதியை சேர்ந்த 20 வயது பெண்ணுக்கு இன்று கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

மேலும், இந்த பெண் கடந்த 12ம் தேதி பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இதைத்தொடர்ந்து அந்த பெண்ணுக்கு கடந்த 15ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. பின்னர் அந்த பெண்ணுக்கு தொற்று இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் பரிசோதனை செய்ததில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து அந்த பெண்ணை கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்கள், செவிலியர்கள், பெண்ணின் கணவர் உள்ளிட்ட 12 பேர் சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...