கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 15 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்றால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 15 பேர் குணமடைந்து மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்து வீடு திரும்பினர்.


கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்றால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 15 பேர் குணமடைந்து மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்து வீடு திரும்பினர்.

உலகையே உலுக்கி வரும் வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதாரத் துறையும், மருத்துவத் துறையும், காவல்துறையும், தூய்மைப் பணியாளர்கள் துறையும் பல்வேறு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் மருத்துவர்கள் தொற்றினால் பாதிக்கப்பட்டு வருபவர்களை குணப்படுத்தும் நோக்கில் சிகிச்சை முறைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் தொற்றால் அனுமதிக்கப்படும் பலர் சிகிச்சைகள் முடிந்து குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.

இதனிடையே, கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையிலிருந்து முதற்கட்டமாக ஐந்து பேரும், இரண்டாம்கட்டம் ஆறு பேரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில் நேற்றிரவு மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த 9 பேர், பொள்ளாச்சியைச் சேர்ந்த 3 பேர் மற்றும் கோவையின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 3 பேர் என மொத்தம் 15 பேர் குணமடைந்தனர். இதைத்தொடர்ந்து இந்த 15 பேரும் மருத்துவமனை வாசலில் வைத்து மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும் தங்களின் நன்றியை தெரிவித்து மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...