நீலகிரி: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே மட்ட கண்டி பகுதியில் தோட்ட வேலியில் சிக்கிக்கொண்ட சிறுத்தை அரை மணி நேர போராட்டத்துக்குப் பின் அங்கிருந்து தப்பிச் சென்றது.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள மஞ்சூர் பகுதியில் வேல்முருகன் என்பவருடைய தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்திற்குள் வனவிலங்கு வராமல் இருப்பதற்காக கம்பி மற்றும் கயிரால் வேலி அமைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று அவ்வழியாக வந்த சிறுத்தை தோட்டத்திற்குள் வருவதற்காக முயன்றபோது, அது வேலியில் சிக்கிக்கொண்டது. இதை கண்ட அப்பகுதி மக்கள் கூச்சலிடவே சிறிது நேரத்தில் சிறுத்தை அந்த வேலியை பிய்த்துக் கொண்டு தப்பி ஓடியது. இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.