கோவை சிங்காநல்லூர் காவல் நிலையம் அருகில் டிரான்ஸ்பார்மர் திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு!

கோவை: கோவை சிங்காநல்லூர் காவல் நிலையம் அருகில் உள்ள டிரான்ஸ்பார்மரில் திடீரென தீ பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனை கண்ட காவல்துறையினர் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர்.

கோவை: கோவை சிங்காநல்லூர் காவல் நிலையம் அருகில் உள்ள டிரான்ஸ்பார்மரில் திடீரென தீ பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனை கண்ட காவல்துறையினர் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர்.

பின்னர் தகவலறிந்து விரைந்து வந்த அவர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 



இந்த டிரான்ஸ்பார்மர் அமைந்து உள்ள பகுதியின் அருகில் காவல் நிலையமும் அதன் பின்புறம் காவலர்கள் குடியிருப்புகள் உள்ளது.

மேலும், இந்த டிரான்ஸ்பார்மர் அமைந்து உள்ள இடத்தின் பின்புறம் தனியார் மருத்துவனையும் செயல்பட்டு வருகிறது. பேருந்து நிலையம் சற்று தொலைவில் அமைந்து இருந்தாலும் பேருந்துகள் இங்கு தான் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்று. மக்கள் இங்கு இருந்து ஏறுவது வழக்கமான ஒன்றாக கொண்டு இருந்தனர்.

144 தடை உத்தரவின் காரணமாக மக்கள் நடமாட்டம் இல்லாததால் டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட தீயை தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்து காரணமாக மின்தடை ஏற்பட்டு உள்ளதை சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...