திருப்பூர்: திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டதால் கடந்த இரண்டு நாட்களாக யாருக்கும் தொற்று இல்லை என கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கிருமிநாசினி தெளிக்கும் கனரக வாகனங்களை பார்வையிட்ட கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு இன்று மட்டும் 14 லட்சம் ரூபாய் வரை வழங்கியுள்ளதாகவும், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிறப்பாக கையாண்டதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்றார்.
அதேபோல, மாவட்டத்தில் அனைவருக்கும் நிவாரணம் சென்றடையும் வகையில் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார். முன்னதாக பல்வேறு அமைப்பினர் அளித்த முதல்வர் நிதிக்கான காசோலையினையும் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்வின் போது, மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.