மேட்டுப்பாளையத்தில் அதிகாலையில் ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம்!

கோவை: மேட்டுப்பாளையத்தில் இன்று அதிகாலையில் ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை: மேட்டுப்பாளையத்தில் இன்று அதிகாலையில் ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். 

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள நெல்லிமலை வனப் பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் நடமாட்டம் சாலைகளில் பெருமளவு குறைந்து வெறிச்சோடி காணப்படுகிறது.

இந்நிலையில், மேட்டுப்பாளையம் வனச் சரகம், நெல்லிமலை காப்புக் காட்டுப் பகுதியில் இருந்து புதன்கிழமை அதிகாலையில் வெளியேறிய ஒற்றை ஆண் யானை குடியிருப்புகள் அதிகம் உள்ள சமயபுரம் பகுதிக்குள் புகுந்து சாலையில் சுற்றித்திரிந்துள்ளது.

இது குறித்து தகவல் கிடைத்ததும் வேட்டைத் தடுப்புக் காவலா்கள், வனத் துறையினா் அந்த இடத்துக்குச் சென்று பொதுமக்கள் யாரும் வீடுகளைவிட்டு வெளியே வர வேண்டாம் என உஷாா்படுத்தினா்.

இதையடுத்து, பட்டாசுகளை வெடித்து யானையை வனப் பகுதிக்குள் துரத்தினா். யானை நடமாட்டத்தால் தாங்கள் அச்சத்தில் உள்ளதாக சமயபுரம் பகுதி பொதுமக்கள் தெரிவித்தனா்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...