கொரோனா தடுப்பு நடவடிக்கை: உதகையில் பொதுமக்களுக்கு ரத்த மாதிரி பரிசோதனை ஆய்வு செய்ய நடமாடும் வாகன இயக்கம் துவக்கம்

நீலகிரி: உதகையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பொதுமக்களுக்கு ரத்த மாதிரி பரிசோதனை ஆய்வு மேற்கொள்ளும் நடமாடும் வாகன இயக்கம் துவக்கப்பட்டது.

நீலகிரி: உதகையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பொதுமக்களுக்கு ரத்த மாதிரி பரிசோதனை ஆய்வு மேற்கொள்ளும் நடமாடும் வாகன இயக்கம் துவக்கப்பட்டது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நீலகிரியில், கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

கொரோனா தொற்றுள்ள, 9 பேர் இ.எஸ்.ஐ., சிகிச்சை பெற்று வருகின்றனர். 232 பேர் வீட்டு கண்காணிப்பிலும், வெளி மாவட்டங்களிலிருந்து வந்த, 800 பேர், 14 நாட்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 'சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதுடன், வெளியிடங்களுக்கு வருபவர்கள் 'மாஸ்க்' கட்டாயம் அணிய வேண்டும்,' என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பொதுமக்களுக்கு ரத்த மாதிரி பரிசோதனை ஆய்வு மேற்கொள்ளும் நடமாடும் வாகன இயக்கம் துவக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார். 

இது குறித்து சுகாதாரத் துறை துணை இயக்குனர் பாலுசாமி கூறுகையில், பொதுமக்களுக்கு தொடர்ந்து சளி, இருமல், காய்ச்சல் இருந்தால் ரத்த மாதிரி பரிசோதனை செய்வது, மூலம் நோய் தொற்று அபாயத்தை கண்டறிந்து தடுக்க முடியும் என்றார். 

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...