உதகையில் நஞ்சநாடு கிராமத்தில் 960 குடும்பங்களுக்கு இலவச காய்கறிகள் வழங்கும் நிகழ்ச்சி

நீலகிரி: உதகையில் நஞ்சநாடு கிராமத்தில் 960 குடும்பங்களுக்கு இலவச காய்கறிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லீமா அமலினி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ் கிருஷ்ணன், சந்திரசேகர், உதகை ஒன்றிய தலைவர் மாயன் ஆகியோர் வழங்கினர்.

நீலகிரி: உதகையில் நஞ்சநாடு கிராமத்தில் 960 குடும்பங்களுக்கு இலவச காய்கறிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லீமா அமலினி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ் கிருஷ்ணன், சந்திரசேகர், உதகை ஒன்றிய தலைவர் மாயன் ஆகியோர் வழங்கினர்.

தமிழக அரசு கொரோனோ வைரசை ஒழிப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அவரவர் மாவட்டங்களிலும் ஆய்வுகள் செய்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா ஓய்வின்றி மாவட்டம் முழுவதுமே நேரில் சென்று ஆலோசனைகளை உத்தரவுகளை கூறி அற்புதமாக செயல்பட்டு வருகிறார். அவருடன் இணைந்து அனைத்து துறை அதிகாரிகளும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.



அதன்படி, உதகை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ் கிருஷ்ணன், சந்திரசேகர், உதகை ஒன்றிய தலைவர் மாயன் ஆகியோர் இணைந்து உதகை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று உதகை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நஞ்சநாடு ஊராட்சியில் நஞ்சநாடு கிராமத்தில் 960 குடும்பங்களுக்கும் இலவச காய்கறிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லீமா அமலினி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ் கிருஷ்ணன், சந்திரசேகர், உதகை ஊராட்சி தலைவர் மாயன், இன்கோசர்வ் தலைவர் சிவக்குமார், எப்பநாடு ஊராட்சி தலைவர் சிவக்குமார், பேரகல் நஞ்சுண்டன் ஆகியோர் நேரில் வழங்கினர்.

Newsletter

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...