கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றார். 144 தடை உத்தரவின் காரணமாக குறைந்த அளவிலேயே ஊழியர்கள் பணிக்கு வந்து செல்கின்றனர்.

மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து உள்ள நிலையில் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் தொடர்பு அலுவலகம் அருகில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் மற்றும் கால் நடை பராமரிப்பு துறை அலுவலகம் அருகில் 3 அடி நீள கருநாக பாம்பை கண்ட மக்கள் தொடர்பு அலுவலக ஊழியர்கள், தெற்கு தீயணைப்பு துறை நிலைய அலுவலகதிற்க்கு தகவல் அளித்தனர்.

இதனை தொடர்ந்து தெற்கு தீயணைப்பு துறை நிலைய அலுவலர், செல்வமோகன் தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள் ஜீவ மாணிக்கம், சிவக்குமார், விக்னேஷ் என ஐந்து பேர் கொண்ட குழு நீண்ட போராட்டதிற்கு பின் பாம்பை பிடித்தனர்.
பின்னர், அந்த பாம்பு சாக்கு பையில் பத்திரமாக கட்டி எடுத்து செல்லபட்டது. வனப்பகுதியில் பிடிபட்ட பாம்பு விடப்படும் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.