கோவை: கோத்தகிரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் ஈடுபட்டு வந்த இளம் மருத்துவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோத்தகிரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் ஈடுபட்டு வந்த இளம் மருத்துவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமுகையைச் சேர்ந்த 30 வயது இளம் மருத்துவர் ஜெயமோகன், நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் அள்ளிமாயார் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த 10 ஆம் தேதி அன்று அவர் சொந்த ஊரான சிறுமுகைக்கு சென்றனர். தொடர் காய்ச்சல் மற்றும் உடல் உபாதைகள் காரணமாக அவர் கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவரக்கு அங்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் உடல்நிலை நேற்று 14 ஆம் தேதி மோசம் அடைந்த நிலையில், அவர் உடலில் இருந்த முக்கிய உறுப்புகள் செயலிழந்த நிலையில் அவர் நேற்று இரவு கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மருத்துவர், ஜெயமோகன் உயிரிழந்தார்.
அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதால் அவர் இறந்திருக்கக்கூடும் என்று சமூக வலயத்தலங்களில் வதந்தி பரவி வரும் நிலையில், இறந்த மருத்துவருக்கு கொரோனா தொற்று இல்லை என தனியார் மருத்துவமனை உறுதிப்படுத்தியுள்ளது.