கோத்தகிரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் ஈடுபட்டு வந்த மருத்துவர் கோவையில் டெங்கு காய்ச்சலால் பலி

கோவை: கோத்தகிரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் ஈடுபட்டு வந்த இளம் மருத்துவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோத்தகிரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் ஈடுபட்டு வந்த இளம் மருத்துவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சிறுமுகையைச் சேர்ந்த 30 வயது இளம்‌ மருத்துவர்‌ ஜெயமோகன்‌, நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் அள்ளிமாயார் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்தார். 

இந்நிலையில், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த 10 ஆம் தேதி அன்று அவர் சொந்த ஊரான சிறுமுகைக்கு சென்றனர். தொடர் காய்ச்சல் மற்றும் உடல் உபாதைகள் காரணமாக அவர் கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 



அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவரக்கு அங்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் உடல்நிலை நேற்று 14 ஆம் தேதி மோசம் அடைந்த நிலையில், அவர் உடலில் இருந்த முக்கிய உறுப்புகள் செயலிழந்த நிலையில் அவர் நேற்று இரவு கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மருத்துவர், ஜெயமோகன் உயிரிழந்தார். 

அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதால் அவர் இறந்திருக்கக்கூடும் என்று சமூக வலயத்தலங்களில் வதந்தி பரவி வரும் நிலையில், இறந்த மருத்துவருக்கு கொரோனா தொற்று இல்லை என தனியார் மருத்துவமனை உறுதிப்படுத்தியுள்ளது. 

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...