கோவை: வால்பாறையில் கொரானா தடுப்பு குழுவினருக்கு வேட்டி சேலை வழங்கி கஸ்தூரி வாசு எம்.எல்.ஏ பாராட்டு தெரிவித்தார்.

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி மூலம் 94 பேர் கொரானா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் கிருமி நாசினி மருந்து தெளிப்பது நகரங்களை தூய்மை படுத்துவது உட்பட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இவர்களுக்கு வால்பாறையில் உள்ள தனியார் மண்டபத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலமாக மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கலந்து கொண்ட வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு அவர்களின் சேவையை பாராட்டி வேட்டி சேலை வழங்கினார். மேலும், அவர்களுக்கு மதிய உணவு வழங்கி சிறப்பித்தார்.

இதனை தொடர்ந்து, வால்பாறை புதிய மார்க்கெட் வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தை பார்வையிட்டு உணவின் தரத்தை பரிசோதித்த பின்னர் மதிய உணவை மக்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, நகராட்சி ஆணையாளர் டாக்டர் பவன்ராஜ், கூட்டுறவு வங்கி தலைவர் வால்பாறை அமீது, நகர செயலாளர் மயில் கணேசன், சலாவுதீன், நரசப்பன் மருத்துவர்கள் செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.