வால்பாறையில் கொரானா தடுப்பு குழுவினருக்கு வேட்டி சேலை வழங்கி எம்.எல்.ஏ கஸ்தூரி வாசு பாராட்டு

கோவை: வால்பாறையில் கொரானா தடுப்பு குழுவினருக்கு வேட்டி சேலை வழங்கி கஸ்தூரி வாசு எம்.எல்.ஏ பாராட்டு தெரிவித்தார்.

கோவை: வால்பாறையில் கொரானா தடுப்பு குழுவினருக்கு வேட்டி சேலை வழங்கி கஸ்தூரி வாசு எம்.எல்.ஏ பாராட்டு தெரிவித்தார். 

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி மூலம் 94 பேர் கொரானா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் கிருமி நாசினி மருந்து தெளிப்பது நகரங்களை தூய்மை படுத்துவது உட்பட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்த நிலையில், இவர்களுக்கு வால்பாறையில் உள்ள தனியார் மண்டபத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலமாக மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கலந்து கொண்ட வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு அவர்களின் சேவையை பாராட்டி வேட்டி சேலை வழங்கினார். மேலும், அவர்களுக்கு மதிய உணவு வழங்கி சிறப்பித்தார். 



இதனை தொடர்ந்து, வால்பாறை புதிய மார்க்கெட் வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தை பார்வையிட்டு உணவின் தரத்தை பரிசோதித்த பின்னர் மதிய உணவை மக்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, நகராட்சி ஆணையாளர் டாக்டர் பவன்ராஜ், கூட்டுறவு வங்கி தலைவர் வால்பாறை அமீது, நகர செயலாளர் மயில் கணேசன், சலாவுதீன், நரசப்பன் மருத்துவர்கள் செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...