நீலகிரி: நீலகிரியில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள எஸ்.கைகாட்டியில் நெடுகுளா ஊராட்சியில் தினமும் கிருமிநாசினி தெளித்து சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று வரை 1173 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்த கொடிய வைரஸ் கிருமியை பரவாமல் தடுக்க நீலகிரி மாவட்ட நிர்வாகம் தீவிரமாக பல்வேறு நடவடிக்கைகளை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில், நெடுகுளா ஊராட்சிக்கு உட்பட்ட எஸ்.கைகாட்டி பகுதியில் கொரோனோ வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதால் இந்த கிராமத்தைச் சுற்றியுள்ள 5 கிராமப் பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இப்பகுதிக்குள் வெளி நபா்கள் யாரும் செல்லாத முடியாத படியும், உள்ளிருப்பவா்கள் வெளியே வர முடியாத படியும் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இப்பகுதி மக்களுக்கான தேவையான அத்தியாசியப் பொருள்கள் மாவட்ட நிா்வாகம் சாா்பில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நெடுகுளா ஊராட்சி எஸ்.கைகாட்டி பகுதியில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவுபடி. ஊராட்சிகளின் உதவி இயக்குநர் பாஸ்கர் தலைமையில் கோத்தகிரி ஊராட்சி ஓன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் நந்தகுமார், ஊராட்சி தலைவர், ஊராட்சி செயலர் சதிஷ், ஊராட்சி துணை தலைவர் ஆகியோர் இணைந்து தூய்மை பணியாளர்கள் மூலம் எஸ்.கைகாட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள் அனைத்திலும் தீவிரமான சுகாதார பணிகளை செய்து வருகின்றனர்.

இத்துடன் நெடுகுளா ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து கிராம சாலைகள், கால்வாய்கள், குடியிருப்பு பகுதிகள் அனைத்திலும் கிருமிநாசினி தெளித்து சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.